ஆண்களுக்கு ஒரு ரொமான்டிக் ஐடியா sex ideas for men

* துணைவியுடன் ஒரு குஷியான குளியல் முடித்தப் பிறகு துணைவியை படுக்கறை வரை ஏந்திச் செல்லுங்கள்.

* ஒரு சின்ன மாசாஜ் (துணைவிக்கு)இ இதற்கான பலனை அடுத்த நாள் இரவில் தெரியும்.

* துணைவியின் தோள்களில் தன் கைகளை போட்டுஇ சிறிது தூரம் நடக்கலாம்.

* துணைவியின் கூந்தலை அவருக்கு வலிக்காமல்இ பூ போல மெல்ல வருடங்குள்இ கூந்தலில் சிக்கல் இருந்தால் அதனை மெல்ல எடுக்க வேண்டும்.

* துணைவியின் அழகைப் பற்றி வர்ணியிக்க வேண்டும்இ அதை தான் உங்களது துணைவி விரும்புவார்.

உங்கள் விதைப்பையில் வலி ஏற்படுவதுண்டா?

பெரும்பாலான ஆண்கள் தங்களின் அந்தரங்க பகுதியில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதனை மருத்துவரிடம் சொல்ல பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் தயங்குகின்றனர். நிறைய ஆண்களுக்கு விதைப்பையானது அவ்வப்போது வலிக்கும். ஆனால் அப்படி வலிப்பதற்கான காரணங்கள் தெரியாது. மேலும் வலித்தாலும் அதனை மருத்துவரிடம் சொல்லி, அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள தயங்கி மறைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கு விதைப்பையானது வலிக்கிறது என்றால் அதற்கு பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்கள் என்னவென்று தெரிந்து, அதனை சரியான நேரத்தில் சரிசெய்யாவிட்டால், பெரும் பிரச்சனையை சந்திக்கக்கூடும். குறிப்பாக விதைப்பைகளை இழக்க நேரிடும். எனவே விதைப்பையானது வலிக்க ஆரம்பித்தால், உடனே சற்றும் தயங்காமல் மருத்துவரை சந்தியுங்கள்.

அதிலும் விதைப்பையானது சில நேரங்களில் இருமலின் போதும் வலிக்க ஆரம்பிக்கும். அப்படி எப்போதும் இருமலின் போது வலித்தால், அதற்கு காரணம் ஹெர்னியாவாக இருக்கலாம். ஒருவேளை உட்கார்ந்து எழும் போது, விதைப்பையானது பாரமாக இருப்பது போன்று இருந்தால், விதைப்பையில் உள்ள நரம்புகள் பருத்து உள்ளது என்று அர்த்தம். இதுப்போன்று விதைப்பையில் வலி எடுக்க பல காரணங்கள் உள்ளன. இங்கு அவற்றில் சில காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

வெரிகோசல் கட்டி 
நீங்கள் எழுந்து நிற்கும் போது உங்கள் விதைப்பையானது பாரமாகவும், உட்கார்ந்திருந்தால் தான் நன்றாக உள்ளது என்பது போல் உணர்கிறீர்களா? அப்படியெனில் உங்களின் விதைப்பையில் உள்ள இரத்த நாளங்களானது பருத்து ஆங்காங்கு நரம்பு முடிச்சுக்கள் அதிகம் உள்ளது என்று அர்த்தம். இப்படி விதைப்பையில் முடிச்சுக்களானது அதிகரித்தால், வலியானது அதிகரித்து, கஷ்டமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
காயங்கள் மற்றும் இரத்தக்கசிவு
 எப்போதுதாவது உங்களின் விதைப்பையில் பலத்த அடிக்கு உள்ளாகியிருந்தால், சில நேரங்களில் அவ்விடத்தில் காயங்களுடன், இரத்தக்கசிவுகளும் ஏற்படும். எனவே அந்நேரத்தில் மருத்துவரிடம் போதிய சிகிச்சையை எடுத்துக் கொண்டு, நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.

ஹெர்னியா
ஹெர்னியா என்பது வெட்டுக்காயம் உள்ள இடத்திலோ அல்லது ஏதேனும் இணையும் இடத்திலோ புதிதாக ஒரு திசு வளர்வதைக் குறிக்கும். அதிலும் உங்களுக்கு அந்தரங்கப் பகுதியான விதைப்பையில் வலி இருந்தால், உங்களின் விதைப்பை உடலுடன் இணையும் இடத்தில் புதிதாக ஒரு திசு வளர்ந்திருக்கும். எனவே அவற்றை கவனித்து தாமதிக்காமல் உடனே அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிடுவது நல்லது.

சிறுநீரக கற்கள் 
உங்களக்கு சிறுநீரக கற்கள் இருந்தாலும் விதைப்பையானது வலிக்க ஆரம்பிக்கும். எனவே அதனை கவனித்து, அதனை சரிசெய்ய முயலுங்கள்.

விரைச்சிரை திருகுதல் 
சில நேரங்களில் அலறும் வண்ணம் வலியானது எடுத்தால், அதற்கு காரணம் விந்து தண்டானது திருகியிருந்தாலோ அல்லது விதைப்பைக்கு செல்ல வேண்டிய இரத்தமானது தடைப்பட்டிருந்தாலோ தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும். இந்நிலையில் உடனே மருத்துவரை சந்திக்காவிட்டால், உங்களின் ஒருவிதையை இழக்கக்கூடும்.

விரைமேல் நாள அழற்சி 
உங்களின் விதைப்பையில் உள்ள விரைமேல் நாளங்களானது பாக்டீரியா அல்லது வைரஸினால் தாக்கப்பட்டிருந்தால், அவ்விடத்தில் அழற்சி ஏற்பட்டு கடுமையான வலியை ஏற்படுத்தும். பொதுவாக இந்த நிலையானது பால்வினை நோய்கள் அல்லது சிறுநீர் சார்ந்த தொற்றுக்களினால் ஏற்படும்.

விரைச்சிரை 
சிதைவு விதைப்பையின் மேல் ஏதேனும் அடிப்பட்டால், அப்போது காயத்துடன், இரத்தக்கசிவு ஏற்படும். ஆனால் அதுவே கடுமையான அடியாக இருந்தால், விரைச்சிரையானது சிதைவு பட்டு, கடுமையான வலியை ஏற்படுத்தும். எனவே எப்போதும் ஆண்கள் தங்களின் விதைப்பையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்பெர்மடோசீல் 
ஸ்பெர்மடோசீல் என்பது நீர்க்கட்டியாகும். இந்த நீர்க்கட்டியானது விதைகளுக்கு பின்னால் உருவாகக்கூடியது. ஒருவேளை இந்த நீர்க்கட்டியானது மிகவும் பெரியதானால், விதைப்பையானது பாரமாகி, வலியை ஏற்படுத்தும்.

இயற்கை முறையில் ஆண்குறி விறைப்புத் தன்மையை அதிகரிக்கலாமா?

கேள்வி :- எனது பெயர் ....... வயது 29 திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் கடந்த வாரந்தொட்டு எனது ஆண் உறுப்பு சரியாக விறைப்படையவில்லை என்பதை என்னால் உணர முடிகின்றது. இதனால் உறவில் திருப்தியின்மையும் ஏற்படுகிறது. இதனை இயற்கை முறையில் குணப்படுத்த முடியுமா?


பதில் :- ஆம் குணப்படுத்த முடியும் நண்பரே. இது ஒரு தற்காலிக பிரச்சினையாகவே தோன்றுகின்றது. உங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை வேலைப்பளு அல்லது மனவுளைச்சல் காரணமாக இருக்கலாம். தூக்கமின்மையும் காரணமாக இருக்கலாம் முடிந்த வரை மனதை இலகுவாக வைத்திருக்கள். அல்லது ஜாலியாக ஒரு வெளியூர் விசிட் சென்று வாருங்கள் மனைவியுடன்  புதியமுறைகளை கையாண்டு உறவில் ஈடுபடப்பாருங்கள். பலன் கிடைக்கும்.  இயற்கை முறையில் எளிய மருந்து முரங்கை பூவில் 5 வயக்கரா மத்திரைக்கு உரிய வீரியம் உண்டு இதனை முயற்சிக்கவும் விந்து பலம் அதிகரிக்கும் விறைப்பு தன்மையும் அதிகரிக்கும். தொடர்ச்சியாக ஒரு மண்டலம் அதாவது 40 நாட்கள் இரவில் மேற்கொள்ளவும்.

வழிமுறை
முருங்கைப் பூ 25இ சுத்தமான பசும்பாலில் சேர்த்துஇ காய்ச்சி இரவு படுக்கும்போது குடிக்கவும்இ அத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்துச் சாப்பிட்டு வாருங்கள் இலகுவான முறைதான் 40 நாட்கள் மேற்கொள்ளவும்.

ஆணுறுப்பின் முனையில் பருக்களா?

எந்த ஆணும் ‘இந்த பிரச்சனைக்காக  அச்சப்படவேண்டிய அவசியமில்லை! இது ஆணுறுப்பின் தலைப் பகுதியின் அடியில் ஏற்படுகின்ற சின்ன சின்ன கட்டிகள் (Pearly penile papules ) முத்துக் கோர்வை போல வரிசை யான தோற்றம் கொடுப்பதால் இந்தப் பெயர் வந்தது.

இவ்வாறு கட்டிகள் ஏற்பட்டவுடன் ஆண்கள் தங்களுக்கு எதோ பாலியல் தொடர்பான நோய் ஏற்பட்டு விட்டதாக அச்சப்பட்டு வெளியில் சொல்லிக்கொள்ள முடியாமலும் தவிர்த்துக் கொண்டிருப்பார்கள்.
உண்மையில் இது அச்சப்பட வேண்டிய விடயமா?
இல்லவே இல்லை!
இது பொதுவாக இளவயது ஆண்களுக்கு ஏற்படுகின்ற மாற்றமாகும். இதற்கும் பாலியல் நோய்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது பாலியல் மூலம் தொற்றுகிற நோயும் அல்ல.
இந்த பொதுவான பிரச்சினைக்காக எந்த ஆணும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.
இதற்கு எந்தவிதமான மருத்துவச் சிகிச்சையும்தேவையும் இல்லை.
அதையும் தாண்டி இவற்றை நீக்கத் தான் வேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள் ஒரு தோலியல் நிபூணரச் சந்தித்து காபனீர் ஒக்சை ட்டு லேசர் மூலம் இலகுவாக அகற்றிக் கொள்ளலாம்.

திருமணத்திற்கு முன் உடலுறவில் ஈடுபடக் கூடாது என்பது ஏன்? (அறிவியல் சார்ந்த விளக்கம்)

உடலுறவு. இந்த வார்த்தையை சும்மா உச்சரித்தாலே அனைவரின் புருவமும் உயரும். இதனைப்பற்றி வெளிப் படையாக பேசுவது என்பது கற்பனைக்கு எட்டாத ஒன்றாக விளங் குகிறது.

வெளிப்படையாக பார்த்தால், இது நடைமுறையில் ஒரு முக்கியமான அங்கமாக விளங்கும் விஷயமே. ஆனாலும் கூட

இதில் பெருமளவு எதிர்மறைகள் அடங் கியுள்ளது. ஒரு குடும்பத்தி ற்குள் இத னை கண்டிப்பாக உச்சரிக்கவே கூடாது. பொது இடத்தில் உடலுறவை பற்றி வெ ளிப்படையாக பேசுவது பெருமளவில் எதிர்க்கப்படு கிறது.

அதுவும் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளுதல் என்றால் கேட்கவே வேண்டாம், அனைத்து திசைகளில் இருந்தும் எதிர்ப்புகள் ஏற்படும். . திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது இந்த சமுதாயத்தில் அதிமாக நடக்கும் ஒன்றே. ஆனாலும் கூட அது ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றே. திருமணம் என்று வந்து விட்டால், திருமணத்திற்கு முன் உடல் ரீதியான உறவு கூடவே கூடாது என்று சத்தியம் எடுப்பது எழுதப்படாத விதி. ஆனால் திருமணம் எனும் பந்தத்திற்குள் நுழைய, வெறும் சாஸ்திர சம்பிரதாயங்களுக்காக மட்டுமே எடுக்கப்படும் சத்தியமாகவே அது பார்க்கப்படுகிறது.

அவைகளை கடைப்பிடித்தால் தானே இந்த சமுதாயத்தில் ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக அதிகாரப் பூர்வமாக வாழ்க்கையை தொடங்க முடியும். ஆனால் ஏன் இப்படி என்று எப்போதாவது வியந்திருக்கிறீர்களா? உச்சரிக்க கூட கட்டுப்பாடு இருக்கும் வார்த்தையான உடலுறவில் ஏன் ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன் ஈடுபட கூடாது? இரண்டு பேரும் மனது ஒத்து போய் உடலுறவு கொள்ள விருப்பப்படும் போது அதனை ஏன் சமுதாயம் எதிர்க்கிறது?

பழங்காலம் முதலே விதிமுறைக ளை விதித்து அதற்கேற்ப அதனை பின்பற்றி வாழ்ந்து வரும் சமுதாயம் இது. அதை செய்ததற்கு முக்கிய காரணம் சமுதாயம் என்பது ஒரு அறநெறியுடன் விளங்கு தற்காக தான். இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் சமுதாயத்தில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதுவும் திருமணத்திற்கு முன் உடலுறவில் ஈடுபடுவது தொடர்பான செயல் முறையில், சமுதாயத்தின் எண்ணம் மாறிக் கொண்டே வருகிறது. திருமணத்திற்குமுன் தன் வருங்கால கணவன் அல்லது மனைவியுடன் உடல்ரீதியான உறவை வைத்துக்கொள்வதில் இன்றைய தலைமுறை மிகவும் வெளிப்படையாக உள்ளனர்.

பெருமளவு, இந்த கேள்விக்கு பதில், சம்பந்தப்பட்ட ஜோடிகளை பொறுத்தே அமையும். இதற்கு பதிலை முழுமையாக “ஆம்” அல்லது “இல்லை” என கூறி விட முடியாது. அதே போல், இந்த எண்ணத்தை நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ பார்க்கவும் முடியாது. அதற்கு ஆதரவாகவும் பேசலாம் அல்லது எதிர்த்தும் பேசலாம். அதில் இருக்கும் நேர்மறையான சில விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.

செக்ஸ் போன்ற ஒரு விஷயத்தை ரகசியமாக தான் பேச வேண்டியிருக்கிறது. நீங்கள் ஒருவரோடு எவ்வளவு நெருக்கமாக பழகினாலும் சரி, இந்த விஷயத்தை பற்றி பேசுவதற்கு முன் நூறு தட வையாவது யோசிப்போம். அப்படி ப்பட்ட சூழ்நிலையில், உங்கள் காதலன் அல்லது காதலியுடன் இதனை பற்றி பேச ஆரம்பித்து விட்டால் அது உங்களுக்கு பெரிய பயனாக இருக்கும். திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடும் முடிவை நீங்கள் எடுத்து விட்டால், கண்டிப்பாக உங்கள் உறவு ஆழமாகும். திருமணத்திற்கு முன்பான உடலுறவை பற்றி நாம் பேசுவது என்றால், அதற்கு பிறகு அவரை திருமணம் செய்வது என்ற அடிப்படையில் தான். அதை விட்டு விட்டு வெறும் பொழுது போக்கு சந்தோஷத்திற்காக ஈடுபடும் உடலுறவை பற்றியது அல்ல.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பாலின விருப்பங்கள் அடங்கியிரு க்கும். இது ஒத்துக்கொள்ள வேண் டிய விஷயம்; அதனை மறுக்க முடி யாது. இரண்டு பேரும் உடல் ரீதி யான உறவில் ஈடுபட முடிவெடுக் கும்போது, அது உடல் ரீதியான சுக த்தை அளிப்பதோடு மட்டுமல்லாம ல், ஒருவர் மீது மற்றவரின் இணையும் தன்மையை சோதிப்பதற்கும் உதவும். உடலுறவில் திருப்தி ஏற்படாமல் போவதால் பல திருமண ங்கள் தோல்வியில் முடியும் உதாரணங்கள் பல உள்ளது. கணவன் அல்லது மனைவியு டன் உடலுறவில் ஈடுபடுவ தை பற்றி திருமண அறிவுரை யில் எதுவும் கூறப்படுவதில்லை. ஆனால் அது இருவருக்கும் உள்ள புரிதலை பொறுத்தே அமையும். உங்களுக்கான சரியான ஜோடியை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து விட்டால், கண்டிப்பாக சரியான பாதையில் நடைப்போட தயாராகி விடுவீர்கள்.

முதல் முறை உடலறுவு என்றால் பலவித உணர்ச்சிகளுடன் கூடிய நடுக்கங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றே. திருமணத்திற்கு முன் உங்கள் வருங்கால கணவன் அல்லது மனைவியுடன் நீங்கள் உடலுறவில் ஈடுபடுவதால் இந்த நடுக்கங்களை கடந்து வரலாம். திருமணம் ஆவதற் குள் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டும் விடுவீர்கள். அதன்பின் இருக்கும் திருமண வாழ்க்கையை சந தோஷமாக கழிப்பீர்கள்.

காலப்போக்கில் திருமணத்திற்கு முன் கொள்ளும் உடலுறவை பற்றிய எண்ணங்கள் மாறி வந்தாலும் இரண்டு பேரும் மனம் ஒத்து அதில் ஈடுபடுவது, தவறுதான். திருமணத்திற்கு எந்தளவிற்கு தாம்பத்தியத்தில் ஈடுபடுகிறார்களோ அந்த அளவிற்கு அவரது உடல் மனம் மட்டு ம்ம‍ல்லாமல் அவர்களது வாழ்க் கையும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதில் எள்ள‍ளவும் சந்தேகமில் லை. பொறுப்பாக செயல்பட்டு சிற ப்பான வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்.